இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்கும் குழுவில் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன் விவரம்:
தலைமை:
கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்)
உறுப்பினர்கள் :
டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்)
ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்)
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்)
டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்)
கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்)
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.,
சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்)
எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்)
மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்)
சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரெய்லர் சொல்வதென்ன?