நாடாளுமன்ற தேர்தல் தோல்வி: தொகுதி வாரியாக எடப்பாடி ஆலோசனை!

Published On:

| By Selvam

2024 நாடாளுமன்ற தேர்தலை தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்ட அதிமுக, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. குறிப்பாக தென்சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர், தேனி, ராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் 2019 தேர்தலை காட்டிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவிகிதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 10 முதல் 19 வரை தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,

ஜூலை 10

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்

ஜூலை 11

சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை

ஜூலை 12

அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி

ஜூலை 13

சிதம்பரம், மதுரை, பெரம்பலூர்

ஜூலை 15

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி

ஜூலை 16

ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர்

ஜூலை 17

தென்காசி, தேனி, திண்டுக்கல்

ஜூலை 18

பொள்ளாச்சி, நீலகிரி, கோவை

ஜூலை 19

விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி ஆகிய தேதிகளில் தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்று தொடங்கும் டிஎன்பிஎல்: எங்கு, எப்போது தெரியுமா?

குபேரா… ராஷ்மிகாவின் முதல் தோற்றம் எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share