எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை இன்று (ஆகஸ்ட் 3) மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை தாக்கல் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளது.
நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு அவை துவங்கியதும் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8-ஆம் தேதியும், இதுகுறித்து பிரதமர் மோடி ஆகஸ்ட் 10-ஆம் தேதி விளக்கமளிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வம்
சென்னிமலை… சிவன்மலை… எரிமலை!: தீரன் சின்னமலைக்கு முதல்வர் மரியாதை!
கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!