தருமபுரியில் உள்ள தேவாலயத்திற்குள் செல்ல விடாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இளைஞர்கள் தடுத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. locals stop annamalai entering into church
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது தருமபுரி மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 9) 2வது நாளாக அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மேட்டூரிலிருந்து பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டிக்கு நடைப்பயணம் சென்ற போது பி.பள்ளிப்பட்டியில் உள்ள தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்திற்கு அண்ணாமலை சென்றுள்ளார்.
அண்ணாமலையின் வருகையைப் பார்த்த அங்கிருந்த இளைஞர்கள், உள்ளே வரக்கூடாது என்று தடுத்துள்ளனர். மேலும் அண்ணாமலையிடம், “இது புனிதமான இடம். இங்கு நீங்கள் மாலை போடக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கு அண்ணாமலை ”அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
உடனே அங்கு கூடியிருந்த இளைஞர்கள், “மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்களை கொன்றவர்களை, கோயில்களை இடித்தவர்களை மத்திய அரசு தடுக்கவில்லை” என்றனர்.
உடனே அண்ணாமலை, ”அரசியல் கட்சிக்காக திமுககாரர்கள் பேசுவது போல பேசக் கூடாது” என்றார்.
இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் “நான் திமுக காரனே கிடையாது. இது எங்க ஊர், எங்க இடம், எங்க மாதா” என்று ஆவேசமாக பதிலளித்தார்.
உடனே அண்ணாமலை, “சர்ச்சு உங்க பெயரில் இருக்கிறதா? இங்கு அனைத்து மக்களும் வருவதற்கு உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
நான் 10 ஆயிரம் பேரை அழைத்து வருவேன். என்ன செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இளைஞர்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம். pic.twitter.com/DhNfiGvi5A
— K.Annamalai (@annamalai_k) January 8, 2024
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: தமிழக அரசு அறிவிப்பு!
அதிமுக வாக்குகளை நீக்க திமுக சதி: ஜெயக்குமார்
Video: முஹமது ஷமி, வைஷாலிக்கு ‘அர்ஜுனா விருது’ வழங்கி கவுரவம்!
locals stop annamalai entering into church