உள்ளாட்சித் தேர்தல்… 2026 சட்டமன்றத் தேர்தல் : அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானம்!

அரசியல்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 12) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், பின்னணி பாடகி பவதாரணி, கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி என பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை,

2024, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு, தேர்தல் பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்திட்ட பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியும், பாராட்டும்!

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை ரத்து செய்திடவும்; மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்திடவும் திமுக அரசை வலியுறுத்தல்.

தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றத் தவறிய திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம்.

மக்கள் நலன் கருதி, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமான பல திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி செயலிழக்கச் செய்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம். மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத திமுக மற்றும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.

மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும்; போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம்.

மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு 18 சதவீத GST வரியை 22 ரத்து செய்யவும், வயநாடு நிலச் சரிவை, தேசியப் பேரிடராக அறிவிக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமான திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

தொழில் வளர்ச்சி குன்றியதற்கு காரணங்களை அறிந்து, அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம்!

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வகுத்துத் தருகின்ற தேர்தல் வியூகப்படி, வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும்; 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியைப் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சமர்ப்பிக்க சூளுரை என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மத்திய அரசுக்கு நன்றியும் கண்டனமும் : திமுக மா.செ கூட்டத்தில் தீர்மானம்!

கலைஞர் நினைவு நாணயம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *