புதிய அமைச்சரவையில் தென் மாநில அமைச்சர்களின் லிஸ்ட்… கூட்டணி கட்சி அமைச்சர்கள் யார் யார்?

அரசியல் இந்தியா

நரேந்திர மோடி நேற்று (ஜூன் 9)மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, 30 மத்திய அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்
இவர்களில் 60 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். 11 பேர் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்.

இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு, சந்திரசேகர் பெம்மாசனி,

மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசுவாமி,

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா – ஜித்தன் ராம் மஞ்சு,

லோக் ஜன சக்தியைச் சேர்ந்த சீராக் பாஸ்வான்,

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராம்நாத் தாகூர், ராஜீவ் ரஞ்சன் சிங்

ராஷ்டிரிய லோக் தளத்தைச் சேர்ந்த ஜெயின் சவுத்ரி,

சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) – பிரதாப் ராவ் ஜாதவ்,

இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே,

அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுப்ரியா படேல் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

என்.டி.ஏ கூட்டணி அமைச்சரவையில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சிகளுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை.

மோடி 3.0 : பதவியேற்ற அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!

ஐந்து முன்னாள் முதல்வர்கள்
கர்நாடகா முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தலைவருமான குமாரசுவாமி,

பீகார் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி,

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார்,

அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனாவால் என ஐந்து

முன்னாள் முதல்வர்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

24 மாநிலங்களில் இருந்து….

Image

உத்தரப் பிரதேசம்(10) – நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி, பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா படேல், ஜித்தின் பிரசாத், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, கமலேஷ் பாஸ்வான் மற்றும் எஸ்.பி.சிங் பாகேல்

பிகார் (8) – கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், சதீஷ் துபே, சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, ராம் நாத் தாக்கூர், லாலன் சிங் மற்றும் ராஜ் பூஷன் சவுத்ரி

மகாராஷ்டிரா (5) – நிதின் கட்கரி, பியூஷ் கோயல், பிரதாப் ராவ் ஜாதவ், ரக்ஷா கட்சே மற்றும் ராம் தாஸ் அத்வாலே

குஜராத் (5) – அமித் ஷா, எஸ் ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, சிஆர் பாட்டீல் மற்றும் நிமுபென் பாம்பானியா

மத்தியப் பிரதேசம் – சிவராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா, சாவித்ரி தாக்கூர் மற்றும் வீரேந்திர குமார்

ராஜஸ்தான்(4) – கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம் மேக்வால், பூபேந்தர் யாதவ் மற்றும் பகீரத் சவுத்ரி

ஒடிஷா (3) – அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மற்றும் ஜுவல் ஓரம்

மேற்கு வங்கம் (2)- சாந்தனு தாக்கூர் மற்றும் சுகந்தா மஜும்தார்.

ஹரியானா(2)- மனோகர் லால் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங்

அசாம் (2) – சர்பானந்தா சோனோவால் மற்றும் பபித்ரா மார்கெரிட்டா

ஜார்க்கண்ட் (2)- சந்திரசேகர் சவுத்ரி மற்றும் அன்னபூர்ணா தேவி

பஞ்சாப் – ரவ்னீத் சிங் பிட்டு

உத்தரகாண்ட் -அஜய் தம்தா

டெல்லி – ஹர்ஷ் மல்ஹோத்ரா

அருணாச்சல பிரதேசம் – கிரண் ரிஜிஜு.

கோவா- ஸ்ரீபாத் நாயக்

ஜம்மு காஷ்மீர் – ஜிதேந்திர சிங்,

ஹிமாச்சல பிரதேசம் – ஜேபி நட்டா

தென் மாநிலங்கள்… 

கர்நாடகா (5) – நிர்மலா சீதாராமன், குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, ஷோபா கரந்த்லாஜே, மற்றும் வி சோமன்னா.

கேரளா – சுரேஷ் கோபி,

தமிழ்நாடு – எல்.முருகன்

தெலங்கானா(2)- கிஷன் ரெட்டி மற்றும் பாண்டி சஞ்சய்

ஆந்திரா (3) – சந்திர சேகர் பெம்மாசனி, ராம் மோகன் நாயுடு, மற்றும் ஸ்ரீனிவாச வர்மா

சாதி வாரியாக…
27 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), 10 பேர் பட்டியல் இனத்தவர் (SC), ஐந்து பேர் பட்டியல் பழங்குடியினர் (ST), மற்றும் ஐந்து பேர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள்.

144 முறை எழுந்து அமர்ந்த குடியரசுத் தலைவர்…

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 144 முறை எழுந்து அமர்ந்தார். ஒவ்வொருவரின் பதவிப் பிரமாணத்தின் போதும், அவர்கள் கையெழுத்திட்டு வணக்கம் தெரிவிக்கும் போதும் எழுந்து அமர்ந்தார்.

அதுபோன்று பிரதமர் மோடி 70 முறைக்கும் மேல் எழுந்து அமர்ந்தார்.

கலந்துகொண்டவர்கள் யார் யார்..

Image

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமதி மொய்சு, சீஷெல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங்,

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தனது மனைவியுடன் வந்து கலந்துகொண்டார்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண்,

நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினி காந்த்,

நடிகர்கள் ஷாருக்கான், அக்‌ஷய் குமார், விக்ராந்த் மாசே, நடிகையும் எம்.பி.யுமான கங்கனா ரணாவத், ரவீனா தந்தூன், அனுபம்கேர், ஹேமமாலினி,

தொழிலதிபர்கள் கவுதம் அதானி, ராஜேஷ் அதானி முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

திமுக முப்பெரும் விழா தேதி மாற்றம்: காரணம் செந்தில் பாலாஜி?

+1
0
+1
0
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *