திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே இணைப்பு பாலம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
சர்வதேச சுற்றுலா தளங்களில் முக்கியமானது குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றைச் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.
அதில், “தமிழ்நாடு கடல் சார் வாரியம், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் திருவள்ளுவர் சிலை பாறையையும் இணைக்கும் சிறப்புமிக்க நவீன கடல்சார் பாதசாரிகள் பாலத்தை 37 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அமைக்க ஒன்றிய அரசின் 50 சதவிகித நிதி உதவியுடன் சாகர் மாலா திட்டத்தின் கீழ் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையிடம் கட்டுமான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதல்நிலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜனவரி 2024 இல் இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோன்று கன்னியாகுமரி துறைமுகத்தில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள படகுத்துறையானது அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழான 50% நிதியுதவி 20 கோடி ரூபாய் செலவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக ஒரே நேரத்தில் மூன்று படகுகளை நிறுத்தக்கூடிய வகையில் நீட்டிப்பு செய்யப்படும். இந்தப் பணியும் ஜனவரி 2024 இல் முடிவடையும்” என்று அறிவித்தார்.
பிரியா
பாலியல் புகாரில் தகிக்கும் கலாஷேத்ரா… உருவானது எப்படி?
டோல் கட்டண உயர்வு : லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!