மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் கால அவகாசமா?

Published On:

| By Kavi


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் நீட்டிக்கப்படுவது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் ஆதாரை இணைக்கக் கடைசி நாள் என்ற நிலையில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் இணைக்கவில்லை.
இந்நிலையில் சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “மொத்தமுள்ள 2.67 கோடி இணைப்புகளில் 90.69% இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. 9.31 விழுக்காடு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
வீடுகளைப் பொறுத்தவரை 2.32 கோடி நுகர்வோர்களில் 2 .17 கோடி பேர் இணைத்துள்ளனர். இதில் 15 லட்சம் பேர் இணைக்க வேண்டியுள்ளது.
கைத்தறியைப் பொறுத்தவரைக்கும் 74 ஆயிரம் இணைப்புகளில் 70 ஆயிரம் இணைக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் இணைப்புகள் பாக்கி இருக்கிறது.
விசைத்தறியைப் பொறுத்தவரை 1.63 லட்சம் பேரில் 1.52 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதில், 9 ஆயிரம் பேர் பாக்கி உள்ளனர்.

குடிசைகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 9.44லட்சம் பேரில், 5.11 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இன்னும் 4 .33 லட்சம் பேர் இணைக்க வேண்டும்.
எனவே இப்போது மின் வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக எத்தனை நாட்கள் கூடுதலாகத் தேவைப்படும், என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என ஆலோசனை நடத்தப்பட்டது.
எனவே, பிப்ரவரி 15ஆம் தேதி வரை, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றார்.
பிரியா

ஜெயலலிதாவின் சொத்துக்கு போட்டியாக வந்த புது அண்ணன்!

“மழைநீர் தேங்காத சென்னை”: முதல்வர் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel