மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கச் சொல்வது இதற்காக தான்: செந்தில் பாலாஜி விளக்கம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின்சாரமோ, அரசின் மானியமோ தடைபடாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்தநிலையில் இன்று(நவம்பர் 28) மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

“மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது அரசின் சலுகைகள் ரத்தாகிவிடும் என்ற தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய மின் இணைப்புக்கான அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்.

எவ்வளவு பேர் சொந்த வீட்டில் குடியிருக்கிறார்கள், எவ்வளவு பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது போன்ற எந்த தரவும் மின்வாரியத்தில் இல்லை.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் இதற்காகதான் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்புக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தன.

மின்வாரியத்தை நவீன மயமாக்குவதற்காக மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

எனவே அரசு வழங்கும் இலவச மின்சாரமும், மானியமும் தொடர்ந்து வழங்கப்படும்.  மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

மின் இணைப்பில் உள்ள பெயர் தொடர்பான சந்தேகங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டிசம்பர் மாதம் வரை மின்கட்டணம் செலுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால் முன்னோர்கள் இருந்து ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால் சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று பதிலளித்தார்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கவுண்டர்கள் குறித்த கேள்விக்கு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.

2 கோடியே 33 லட்சம் பேர் வீடுகளுக்கான மின் இணைப்பை பெற்றவர்கள், அதில் 15 லட்சம் பேர் இதுவரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்த்திருக்கிறார்கள்.

அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் கள் நடைபெறும். கைத்தறி, விசைத்தறி ,100 யூனிட் இலவச மின்சாரம் அனைத்தும் ஏற்கனவே என்ன நடைமுறை இருந்ததோ அதே நடை முறை தான் இருக்கும்.

இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று செந்தில் பாலாஜி கூறினார்.

கலை.ரா

உ.பி.யில் ஆசிரியையிடம் அத்துமீறிய மாணவர்கள்!

உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கோம்..சஞ்சு சாம்சனுக்காக களத்தில் குதித்த ரசிகர்கள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts