”திமுக மாதிரி பன்னீரும் எதிரிதான்…” நடிகை விந்தியா

அரசியல்

திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் “திமுக எப்படி நமக்கு எதிரியோ அப்படித்தான் ஓ.பன்னீர்செல்வமும் நமக்கு எதிரி” என நடிகை விந்தியா பேசியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீரங்கத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான நடிகை விந்தியா திமுக அரசையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில். “திமுக அரசு மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மாறாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது.

அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டிக் காத்து வந்தனர். தற்போது அந்த இடத்தில் எடப்பாடியார் இருந்து நம்மை காத்து வருகிறார்.

திமுக நமக்கு எப்படி எதிரியோ, அதுபோல அதிமுக அலுவலகத்தை தாக்கியவர்களையும் எதிரியாகத்தான் நினைக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக கொண்டுவர பாடுபட வேண்டும்.” என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருக்கும் நடிகை விந்தியாவுடனும் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

அப்போது தனது டிவிட்டர் பக்கத்தில், “தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான்.. இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன்.. கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவரா இல்லை, மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க” எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்படத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க….

+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.