"Let's celebrate November 1st as Tamil Nadu Day": Vijay

“நவம்பர் 1ஐ தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” : விஜய்

அரசியல்

”தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த நவம்பர் 1ஆம் தேதியை வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய,பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.

தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் கோரிக்கை – ஸ்டாலின் ரியாக்சன்!

ஆங்கிலேயர் ஆட்சியர் பல்வேறு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்த இந்தியாவில் மெட்ராஸ் மாகாணமும் ஒன்று.

இதில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரளா, கர்நாடகா, ஒடிசா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள் உள்ளடங்கியிருந்தன.

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று தான் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மெட்ராஸ் என தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

பின்னர் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு நவம்பர்  1 ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

ஆனால் 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நாளான ஜூலை 18ஆம் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

இந்த நிலையில் ராமதாஸ், சீமான், வேல்முருகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ’நவம்பர் 1ஐ  தமிழ்நாடு தினமாக அறிவிக்க வேண்டும் என அறிக்கை விடுத்தனர்.

எனினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்தான் நவம்பர் 1 என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 1ஐ வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் என விஜய் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் வார்னிங்!

“திருமணத்திற்கு பின்பான தனியுரிமையும் அடிப்படை உரிமைதான்”: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *