ரவீந்திரநாத்தை தான் சிறை பிடிக்க வேண்டும், மேனேஜரை அல்ல: தகிக்கும் தங்கத் தமிழ் செல்வன்

அரசியல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ​மாதம் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்கவேல்​ ஆகியோரை​ வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவரது தோட்டத்தில் கிடை போட்டிருந்த அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

எனவே அலெக்ஸ்பாண்டியனை விடுவித்து எம்.பி ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ​தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியிருந்தனர்.

இதேபோல எம்.பி ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனி மாவட்ட வன அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.​

மாவட்ட வன அலுவலர் சமர்தா, ”சிறுத்தை இறந்த இடமானது எம்பி ரவீந்திரநாத் உட்பட மூன்று நபர்கள் பெயரில் உள்ளது.

தோட்ட உரிமையாளர்கள் பெயர்களை வருவாய்துறையினரிடம் இருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ​எம்பி-க்கு சொந்தமான இடம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என​த்​ தெரிவித்​திருந்தா​ர்.

ரவீந்திரநாத் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.​

​இந்நிலையில் தேனி எம்பி ரவீந்திரநாத்​, காளியப்பன், தியாகராஜன் ஆகியோருக்கு மாவட்ட வனத்துறை சார்பில் ​இரண்டு வாரத்திற்குள் ​நேரில் ​ஆஜராகுமாறு இன்று (அக்டோபர் 21 ) சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். அவர் ”முயல், குரங்கு இவற்றையெல்லாம் துப்பாக்கியால் சுட்டால் சிறையில் அடைக்கிறார்கள். சிறுத்தை அடிபட்டு இறந்ததா இல்லை மின்சாரம் தாக்கி இறந்ததா , இயற்கை மரணமா என்பது தெரியவில்லை.

எப்படி இறந்தது என்பது பற்றிய உடற்கூறாய்வு இன்னும் வரவில்லை ஆனால், இறந்த சிறுத்தையின் வாயில் ரத்தம் இருந்ததை பார்க்கையில் அடித்துகொல்லப்பட்டது போல் தான் தெரிகிறது.

எனவே தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி ரவீந்திரநாத் மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டுமே தவிர மேலாளர், ஆடுமேய்ப்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைப்பது தவறு. அதனால் தான் தோட்டத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

இதில் நடவடிக்கை எடுக்க தவறினால் தேனி மாவட்டத்தில் சிறுத்தைகளின் இறப்பு அதிகரிக்கும் என்றும் எனவே இதை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனு அளித்தோம்.

ஓ.பி ரவீந்திரநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்தார்கள் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது” என்றார்.

வினோத் அருளப்பன், மு.வா.ஜெகதீஸ் குமார்

தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆஜராக வனத்துறை சம்மன்!

காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *