மூன்று மாநில சட்டபேரவை தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published On:

| By Monisha

legistative assembly election

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கான சட்டபேரவை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக் காலம் இந்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மூன்று மாநிலங்களிலும் உள்ள 60 சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 18) வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.

திரிபுரா

திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனவரி 21 ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது. வேட்பு மனுத் தாக்கலைத் திரும்பப் பெறுவதற்குப் பிப்ரவரி 2 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மற்றும் நாகலாந்து

மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநிலத்திற்கும் ஜனவரி 31 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கவுள்ளது.

வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு இரண்டு மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்று மார்ச் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இடைத்தேர்தல்

இதனிடையே தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாகச் சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

ஈரோடு இடைத்தேர்தல்: அமலுக்கு வந்தது நடத்தை விதிகள்!

விளக்க அறிக்கையில் ஆளுநர் புது சர்ச்சையை எழுப்பியுள்ளார் : கி. வீரமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel