பொதுக்குழு தீர்ப்பால் எந்த சஞ்சலமும் இல்லை : ஓ.பி.எஸ் தரப்பு!      

அரசியல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும், 2 நீதிபதிகள் தீர்ப்பால் சஞ்சலமில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு இல்லை என்று கூறிய கோவை செல்வராஜ், “தனி நீதிபதியும், 2 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஒருங்கிணைப்பாளரும், தலைமைக்கழக நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

கட்சியைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒ.பன்னீர்செல்வத்தை தான் ஆதரிக்கிறார்கள்.

காரணம் அவருடைய செயல்பாடுகள் மற்றும் அவர் மீதுள்ள நம்பிக்கை. 5, 6 பணக்காரர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு இந்த கட்சியை ஏதோ நிறுவனம் போல வழிநடத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அது ஒருநாளும் நடக்காது. தேர்தல் ஆணையம் இந்த பிரச்சினையை பார்த்துக் கொள்ளும். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, பொருளாளராக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார்.

5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை, தொண்டர்களின் ஆதரவோடு பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார். சட்டப்போராட்டம் தொடரும், எங்களுக்கு எந்த சஞ்சலமும் இல்லை” என்று தெரிவித்தார்.

கலை.ரா

பன்னீரின் எதிர்காலம் பூஜ்ஜியமாகிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.