கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் கர்நாடகாவில் பெற்ற வெற்றியை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு ராகுல் காந்தி புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்தன.
பதவி ஏற்பு விழா மேடையை எதிர்க்கட்சிகளுக்கான பொது மேடையாக ராகுல் காந்தி ஆக்குவாரா என்ற கேள்வியும் எழுந்தன.
இதுதொடர்பாக மே 13ஆம் தேதி,தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட அன்றே மின்னம்பலத்தில், “கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா… எதிர்க்கட்சிகளின் பொது மேடை ஆக்குவாரா ராகுல்?” என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.
அதன்படி பதவி ஏற்பு விழா மே 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பின் பேரில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பெங்களூருவுக்கு வந்து பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
சரத் பவார், நிதிஷ் குமார், ஸ்டாலின், அசோக் கெலாட், பூபேஷ் பாகல், ஹேமந்த் சோரன், சுக்விந்தர் சிங், சீதாராம் யெச்சூரி, தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, டி.ராஜா ,அனில் தேசாய், திருமாவளவன், கமல் ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும், ராகுல் காந்தியுடன் மேடையில் இருந்த அனைத்து தலைவர்களும் ஒன்றாக கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
பிரியா
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு பிரேக்: 12 மாவட்டங்களில் கனமழை!