நபிகளின் தியாகத்தை போற்றும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் இன்று (ஜூன் 17) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது பக்ரீத் வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
ஈதுல் அதா நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி
ரமலான்! இந்த சிறப்பு நாள் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வரட்டும்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான பக்ரீத் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில், அனைத்து நாட்டு மக்களுக்கும் அமைதி, சகோதரத்துவம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை பெற நான் விரும்புகிறேன்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக; உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக; உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக. தியாகத் திருநாள் சிறக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பக்ரீத் வாழ்த்து செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்விஸ் மாநாடு: உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்குமா?
பக்ரீத் பண்டிகை : ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!