தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் தமிழர்கள் இன்று (பிப்ரவரி 11) தைப்பூசம் திருநாளை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் அறுபடைவீடுகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. பால்குடம், காவடி எடுத்தும், வாயில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். leaders’ greetings on Thaipoosam
இந்த நிலையில் தைப்பூச திருநாளுக்கு பிரதமர் மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி leaders’ greetings on Thaipoosam
அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
தைப்பூசத் திருநாள் வாழ்த்து தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டுத் திருவிழா #தைப்பூசம் ஆகும். சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் போற்றப்படும், தமிழர்கள் பன்னெடுங்காலமாக கொண்டாடும் திருநாள் இதுவாகும். தை மாத பூச நட்சத்திரமும் முழுநிலாப் பருவமும் ஒன்றாக வரும் நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களை ஓரணியில் இணைக்கும் திருநாளாகவும் தைப்பூசம் உள்ளது. இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தவெக தலைவர் விஜய்
தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் எங்கள் முப்பாட்டன் திருமுருகப் பெருமான் திருப்புகழ் போற்றுவோம்!