பீகாரில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை, லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் இன்று (மார்ச் 29) ஒதுக்கியுள்ளது.
பீகாரில் மாநில அளவில் இந்தியா கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
பீகார் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 26 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், இடதுசாரி கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, கிஷன்கஞ்ச், கதிஹார், பாகல்பூர், முசாபர்பூர், சமஸ்திபூர், மேற்கு சம்பாரண், பாட்னா சாஹிப், சசாரம் மற்றும் மகாராஜ்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ரத்னம்” புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்!
பில்கேட்ஸுக்கு மோடி கொடுத்த தூத்துக்குடி பரிசு!