Lakshmipathy IAS appointed as Joint Secretary to Chief Minister!

முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்!

அரசியல்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி இன்று (ஆகஸ்ட் 19) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நேற்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

அதனையடுத்து தமிழக அரசின் உயர் பொறுப்புகளில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

முதல்வர் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி புதிய தலைமைச்  செயலாளராக இன்றும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரைத்தொடர்ந்து முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி தற்போது பதவி வகித்து வரும் நிலையில், முதல்வரின் இணை செயலாளராக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Rejected For a Govt Job, TN Man Becomes IAS Officer 19 Years Later!

செங்கல்பட்டு சப் கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டதின் 27 வது புதிய ஆட்சியராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட 28வது புதிய ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பகவத், இதுவரை இல்லம் தேடி கல்வி, காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

அவர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்திரீ 2 : விமர்சனம்

ஒரே விபத்தில் குடும்பத்தை இழந்து தனிமரம்… பிரம்மை பிடித்த நிலையில் தமிழ் சிறுவன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *