எங்களுடைய சென்டிமெண்ட்டை அவமதிப்பதா?: திருப்பரங்குன்றத்தில் எல்.முருகன் பேட்டி!

Published On:

| By Kavi

L. Murugan's interview Thiruparankundram hill issue

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று (பிப்ரவரி 17) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். L. Murugan’s interview Thiruparankundram hill issue

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனது ஆதரவாளர்களுடன் சாமி தரிசனம் செய்த அவர் அங்கிருந்து திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபட்ட எல்.முருகனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து பாஜக தொண்டர்களுடன் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றார்.

அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மேலே செல்ல மறுப்புத் தெரிவித்தனர்.

இதனால் ஆவேசமடைந்த எல்.முருகன், சென்ட்ரல் மினிஸ்டரான என்னை தடுக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு போலீசார் கூட்டமாக செல்ல வேண்டாம் என்று கூறினர்.

இதையடுத்து மலைமீதுள்ள சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார் எல்.முருகன்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “நீண்ட நாட்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரை தமிழக முழுவதும் பாஜக சார்பாக நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அறுபடை வீடுகளுக்கும் நான் வந்திருந்தேன்.

முருகன் வழிபாடு செய்யும் இடங்களில் விரும்பத்தகாத செயல்களை செய்கின்றனர். அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1931ல் வந்த நீதிமன்ற தீர்ப்பில் ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையில் 33 செண்டை தவிர மொத்த மலையும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக 1983ல் வருவாய்த் துறை ஆவணங்களில் தமிழக அரசு சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறது.

வருவாய்த்துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும்.

1994ஆம் ஆண்டு வந்த தீர்ப்பின் படி,அறநிலையத்துறை மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதுகுறித்து அந்த தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும்.

முருக பக்தர்கள் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கிறேன். உடனடியாக மலை மீது தீபம் ஏற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், “இந்த கோயில் ஒரு சைவ திருத்தலம். கருப்பசாமி, மதுரை வீரன் போன்ற சாமிகளுக்கு பலியிடுவது வழக்கம், காவல் தெய்வங்களை கொண்டாடுவதற்காக இதை செய்கிறோம்.
ஆனால் முருகப்பெருமான் இருக்கிற சைவ, வைணவ தலங்களில் பலியிடும் வழக்கம் கிடையாது.

திருப்பரங்குன்றம் மலை மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்தியவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்களுடைய சென்ட்டிமெண்ட்டை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது” என்றார். L. Murugan’s interview Thiruparankundram hill issue

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share