நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறையின் இணையமைச்சராக எல்.முருகன் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் 3வது முறையும் பிரதமராக மோடி ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து 72 அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நேற்று (ஜூன் 10) டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடி முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் இன்று காலை முதல் பொறுப்பேற்று வருகின்றனர்.
அமைச்சர்கள் பொறுப்பேற்பு
வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் இன்று பதவியேற்றுக்கொண்டார். ரயில்வே துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ், சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக பூபேந்தர் யாதவ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும், ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங், மின்சாரத்துறை அமைச்சராக மனோகர் லால் கட்டர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜூ ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக சிவராஜ்சிங் சவுகான், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜோதிராத்ய சிந்தியா, கலாச்சாரத்துறை அமைச்சராக கஜேந்திர சிங் சேகாவத் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இணையமைச்சர்கள் பொறுப்பேற்பு
பாதுகாப்புத்துறை இணையமைச்சராக சஞ்சய் சேத், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர்களாக அனுபிரியா படேல், பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
டாக்டர் ஜிதேந்தர சிங் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறையின் இணையமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும், சுரேஷ் கோபி சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சராகவும், ஜெயந்த் சவுத்திரி திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை இணையமைச்சராக கீர்த்தி வர்தன் சிங், ஐவுளித்துறை இணையமைச்சராகவும் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்,
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 கோடி ரூபாய் விவகாரம்: நயினார் நடத்தும் தேடுதல் வேட்டை!
தாடியை வைத்து சாதனை படைத்த 60 வயது முதியவர்!