அதிமுக – பாஜக கூட்டணி : எல்.முருகன் விளக்கம்

அரசியல்

அதிமுக – பாஜக கூட்டணி உறவு சுமூகமாக தொடர்வதாகவும், கூட்டணி குறித்த பிற முடிவுகளை நாடாளுமன்ற கமிட்டி இறுதி செய்யும் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை தெற்குவெளி வீதி பகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 50க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், மக்களுடன் அமர்ந்து பிரதமரின் மான் கி பாத் உரையை தொலைக்காட்சி மூலம் இன்று (மார்ச் 26) பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் பேசுகையில், “ராகுல்காந்தி தகுதி நீக்கம் சட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் படி தன் பதவியை ராகுல்காந்தி இழந்துள்ளார். குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ராகுல்காந்தி கூறுகிறார்.” என்றார்.

தொடந்து அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக முழு வீச்சில் தயாராகி கொண்டுள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் வகையில் பாஜக பணிகளை தொடர்ந்து செய்கிறது. அதிமுக உடனான கூட்டணி உறவு சுமூகமாக தொடர்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான மேலதிக முடிவுகளை பாராளுமன்ற கமிட்டியே முடிவு செய்யும்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது குறித்து ராஜ்பவனிடம் தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

இராமலிங்கம்

நாங்கள் பேசுவதே போராட்டம் தான்: கார்த்தி சிதம்பரம்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *