நாடாளுமன்ற தேர்தல்: “9 தொகுதிகளுக்கு டார்கெட்”: எல்.முருகன்

அரசியல்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சாலிகிராமத்தில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ” இந்தியாவில் 150 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்று பாஜக டெல்லி தலைமை முடிவு செய்துள்ளார்கள். அதில் தமிழகத்தில் 9 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியானது பாஜகவிற்கு மிக முக்கியமான ஒரு தொகுதியாகும். இந்த தொகுதிக்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு பல கூட்டங்களை நடத்தி வருகிறார். இன்று நிர்வாகிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி வலிமைப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்” என்றவரிடம்

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “திமுக கூட்டணியில் தான் சலசலப்புகள் உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி வலுவாக உள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஜி20 கூட்டம்: சிங்கப்பூர் அதிகாரி நடனம்!

“ஜனநாயக அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”: எடப்பாடி

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *