மோடியின் தேநீர் விருந்தில் முருகன்… மத்திய அமைச்சர்கள் யார், யார்?
பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு மோடி இன்று பிற்பகல் தனது இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆகியோருக்கு தேநீர் விருந்து அளித்தார்.
புதிய மத்திய அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், மத்திய அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
L. Murugan represents Tamil Nadu in #Modi_3
Council of Ministers ????
pic.twitter.com/tILk8jmurS— Varun (மோடியின் குடும்பம்) (@varunmayu) June 9, 2024
அந்தவகையில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்னவ், மன்சுக் மாண்டவியா, ஜெய்சங்கர் ஆகியோரும்,
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், ரவ்னீத் சிங் பிட்டு. ராவ் இந்திரஜித் சிங் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மோடியின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற பின், துறை ரீதியான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்த தேநீர் விருந்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
எனினும் பதவியேற்பு விழாவுக்கு சில நிமிடங்கள் முன்பு வரை அமைச்சரவை பட்டியல் மாற்றி அமைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் நிர்வாக வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மோடியின் செங்கோல் நாடகம் முடிவுக்கு வந்தது: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!
வலுவான எதிர்க்கட்சி… மோடி பதவியேற்பு விழாவிற்கு செல்வதற்கு முன் ரஜினி பேட்டி!