தீபாவளி வாழ்த்து இல்லை… திமுகவை மக்கள் வதம் செய்வார்கள்”: எல்.முருகன்

அரசியல்

தீபாவளி வாழ்த்து கூறாத திமுகவை மக்கள் வதம் செய்வார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று (நவம்பர் 12) தீபாவளி கொண்டாடினார்.

பட்டாசுகள் வெடித்தும், தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கியும் தீபாவளியை கொண்டாடிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மக்கள் திமுகவை வதம் செய்வார்கள்!

அவர் பேசுகையில், “நரகாசூரன் வதம் செய்யப்பட்டதை தீபாவளி திருநாளாக இன்று நாம் கொண்டாடி வருகிறோம்.  அதே போன்று நம்மிடம் உள்ள தீமைகள் அகன்று நன்மை பெருகும் படியாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது வன்மையாக கண்டிக்கத்தது. குல்லா போட்டு மசூதியில் கஞ்சி குடிப்பவர், தேவாலயங்களுக்கு சென்று கேக் வெட்டுபவர், தீபாவளி பண்டிகைக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். இதில் என்ன நெருடல் இருக்கிறது?

சனாதனத்தை ஒழிப்பேன் என்று முதல்வர் சொல்கிறார் என்றால், வரும் ஆண்டில் நரகாசூரர்களாகிய திராவிட கழகம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் திமுகவை விரைவில் வதம் செய்வார்கள். அந்த நாள் நெருங்கிவிட்டது.

அமைச்சரின் குடும்பத்தினரே தாக்கப்படுவதும், கோயில்கள், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் போன்ற சம்பவங்களுமே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி சீர்கெட்டு இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பினுடைய மிகப்பெரிய அவலம் நேற்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை போன்ற மாநகரங்களிலேயே மருத்துவர்கள் இல்லை, 108 ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைக்கவில்லை என்றால், ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கும், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கும் எப்படி கிடைக்கும்?” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியில் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!

யூடியூபர்கள் கலக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’: ட்ரெய்லர் எப்படி?

+1
0
+1
2
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *