நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 7) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காய்ச்சல் மிகவும் மோசமானது. நான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடுமையான காய்ச்சல் உள்ளது. உயிர் போகும் அளவுக்கு உடல் வலி இருக்கிறது. மிகவும் சோர்வுடன் இருக்கிறேன். உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் தான் நான் தற்போது மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்ற அவருக்கு இரு தினங்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று இரவு உடல்நிலை மோசமான நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
கவலையில் விராட்… தேற்றிய ஷாருக்கான்: இணையத்தில் வைரல்!
மாபெரும் மக்கள் மாநாடு: பண்ருட்டி ராமச்சந்திரன்