திமுக கூட்டணிக் கட்சிகளில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள், கொமதேக, முஸ்லிம் லீக் கட்சிகளோடு இதுவரை தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட தமிழ்நாடு 9+ புதுச்சேரி 1 என மொத்தம் 10 தொகுதிகளை விட ஓரிரு தொகுதிகளாவது அதிகம் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் சிலவற்றில் இம்முறை திமுகவே போட்டியிட திட்டமிட்டுள்ளது. அவற்றுள் கிருஷ்ணகிரி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இப்போது கிருஷ்ணகிரி எம்பியாக இருக்கும், காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினரான டாக்டர் செல்லகுமார் அதே தொகுதியில் போட்டியிட தீவிரமாக வேலை செய்து வருகிறார்.
செல்லகுமார் சோனியாவுக்கும் ராகுலுக்கும் நெருக்கமானவர். அவர்களிடம், ‘ தமிழ்நாட்டில் காங்கிரஸ்தான் திமுகவுக்கு தற்போது பலமாக இருக்கிறது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி திமுகவுக்கு இருக்கிறது. அதை தடுப்பதற்கு காங்கிரஸ்தான் திமுகவுக்கு உதவுகிறது. எனவே இம்முறை நாம் கூடுதல் தொகுதிகளை கேட்க வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார். இந்தத் தகவல் டெல்லி காங்கிரஸ் சோர்ஸ்கள் மூலமாகவே திமுக தலைமைக்கும் கிடைத்துள்ளது. மேலும் சில அமைச்சர்களும் செல்லகுமார் பற்றி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் வரும் தேர்தலில் கிருஷ்ணகிரி எம்பி தொகுதியில் திமுகவே போட்டியிடலாம் என்ற ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்காக திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலரை அழைத்து, ‘உங்களுக்கு கிருஷ்ணகிரி தொகுதி தோதாக இருக்குமா?” என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.
எனவே கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தரப்பிலோ, ‘நாங்கள் வெற்றிபெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம்’ என்கிறார்கள்.
–வேந்தன்
கோவையை கேட்கும் சி.பி.எம்..ஒத்து வராத திமுக..காரணம் என்ன?
ஸ்ட்ரிக்டாக நடந்து கொண்ட திமுக..அப்படி என்னதான் கேட்டது மதிமுக?