அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே அணியாக மட்டும் தான் செயல்படும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை இல்லை என்றும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். அவருக்கு அதிமுகவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே அணியாக மட்டும் தான் செயல்படுகிறது. அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக வருவார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓபிஎஸ் பேட்டி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!