விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது என அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி இன்று (பிப்ரவரி 14) தெரிவித்துள்ளார். KP Munusamy asks questions
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமியிடம், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, “எந்த அடிப்படையில் விஜய்க்கு மத்திய அரசு ‘Y’ பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு கட்சியின் தலைவராக நடிகராக இருப்பதால், அவர் செல்கின்ற இடங்களில் கூட்டம் அதிகமாகக் கூடும் என்று பெருந்தன்மையுடன் பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்.
ஆனால், அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜய்யை தன் பக்கம் இழுப்பதற்காக அவரை சந்தோஷப்படுத்துவதற்காக Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் பாஜகவின் கடந்த கால வரலாறு உங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார். KP Munusamy asks questions