ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் நேற்று (அக்டோபர் 10) திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தின் தொடக்க காட்சியில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியரை தவறாக படம் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறும்.
கோவில்பட்டி காந்திநகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்படத்தில் வரும் காட்சிகள் அப்பள்ளியை சித்தரிக்கும் வகையில் இருப்பதாக கூறி, வேட்டையன் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும், இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், கோவில்பட்டி லெட்சுமி திரையரங்கில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்தனர்.
இதுதொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ,
” வேட்டையன் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சி அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
உடனடியாக சம்பந்தப்பட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று லைகா தயாரிப்பு நிர்வாகி தமிழ் குமரனிடம் கோரிக்கை வைத்தேன். சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமனம்!
126 ஆண்டுகள் பழமையானது… எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் ரயில் நிலையம் அகற்றம்!