kovai selvaraj senthil balaji

மறைந்த கோவை செல்வராஜின் உடலுக்கு செந்தில் பாலாஜி அஞ்சலி!

அரசியல்

முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜின் உடலுக்கு இன்று(நவம்பர் 9) அமைச்சர் செந்தில் பாலாஜி அஞ்சலி செலுத்தினார்.

கோவை செல்வராஜ் நேற்று திருப்பதியில் அவரது 3ஆவது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

திருப்பதியில் இருந்து அவரது உடல் இன்று(நவம்பர் 9) காலை கோவைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை செல்வராஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் முருகேசன், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் சோமு சந்தோஷ், டவுன் ஆனந்த் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Image

முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செல்வராஜின் மறைவை குறித்து ” முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தனது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

கோவை செல்வராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

குறைந்தது தங்கம் விலை… மக்கள் மகிழ்ச்சி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

2021 தேர்தல் கடன்… நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ… இவர் மட்டும்தானா?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *