அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விலகியுள்ளார்.
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ,பன்னீர் செல்வம் என இரண்டு அணிகளாக உள்ளது. இதில், ஓ,பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தவர் கோவை செல்வராஜ்.
அதிமுக பொதுக்குழு வழக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன் பின் அதிமுகவில் மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், திடீரென அதிமுகவிலிருந்து விலகியுள்ளார் கோவை செல்வராஜ்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காகச் சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காகச் செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கோவை செல்வராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
பிரியா
சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து!
வெற்றி மாறன் ஷூட்டிங்கில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்!