கோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு!

Published On:

| By Selvam

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி இன்று (ஆகஸ்ட் 5) அறிவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ஆகியோர் கடந்த ஜூலை 3-ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனைதொடர்ந்து நெல்லை, கோவை புதிய மேயர் பதவிகளுக்கு ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், நெல்லை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 4) நெல்லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணனை அறிவித்திருந்தனர்.

கோவை மேயர் தேர்தல் நாளை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ள நிலையில், மேயர் வேட்பாளராக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக இன்று (ஆகஸ்ட் 5) காலை மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்ததோம்.

இந்தநிலையில், கோவை வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் இன்று கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்து… தீர்த்து வைத்த நாட்டாமை சரத்குமார்

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share