கோவை பந்த் : பாஜக புதிய முடிவு!

அரசியல்

கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பந்த் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில், இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை. கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பந்த் நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மாவட்ட நிர்வாகிகள் அழைப்பை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மாவட்ட நிர்வாகத்தின் கடை அடைப்பு போராட்ட விவகாரத்தில் தலையிட மாநில தலைமைக்கு உரிமையே இல்லை” என்றார்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 29) கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பந்த் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், “திமுக அரசை கண்டித்து வரும் 31ஆம் தேதி பந்த் நடத்த கடந்த 26ஆம் தேதி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

கடந்த 25ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை வைத்தார்.

மாநில தலைவரின் கோரிக்கையை எற்றுகொண்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக 27.10.22 அன்று உத்தரவிட்டு உடனடியாக விசாரணையை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கோவை மாநகர வியாபாரிகளும், தொழிலதிபர்களும், தொழில்முனைவோர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைத் தொடர்புகொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி மாநில தலைவர் இன்று என்னுடனும், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணனுடனும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுடனும் பொருளாளர் எஸ்.ஆர். சேகருடனும் மற்றும் முக்கிய தலைவர்களுடனும் உரையாடி கோயமுத்தூர் மாநகர் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி 31.10.2022 அன்று நடைபெற இருந்த இந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

கொடநாடு கொலை வழக்கு : புதிய தகவல்!

கோவை பந்த் : அண்ணாமலை சொல்வது என்ன?

+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.