திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும்போது, ” ஆட்சியில் இருக்கும்போது, இல்லாதபோதும் திமுக ஒரே மாதிரியாக செயல்படும் கட்சி. கொங்குவேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து சமூக நீதிக்கு வித்திட்டது திமுக.
இன்றைக்கு முதலமைச்சர் பதவிக்கு போட்டியில்லை. துணை முதல்வர் பதவிக்கு தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பான்மையாக இருக்கிற திமுகவுக்கு தான் முதல்வர் பதவியும் துணை முதல்வர் பதவியும். டிஎன்பிஎஸ்சி தேர்வு வைத்து துணை முதல்வர் பதவியை தேர்ந்தெடுக்க முடியாது.
திமுக தொண்டர்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் தான் துணை முதல்வராக வர முடியும். அப்படிப்பட்ட ஜனநாயகத்தில் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்” – பவள விழா கூட்டத்தில் திருமா
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் மிஸ்ஸிங்…. வாழ்த்து செய்தி அனுப்பிய கமல்