கொளத்தூர் கன்னித்தீவா? – அமைச்சர் கே.என்.நேரு பதில்!

Published On:

| By Kalai

கொளத்தூர் தொகுதி கன்னித்தீவு போல இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “அதிமுக ஆட்சியில் எந்த மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெறவில்லை.

அதிமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்றிருந்தால் கடந்தாண்டு மழையின் பொழுது பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும், நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்குவது இயல்புதான். ஆனால் அதை எவ்வாறு அகற்றுகிறோம், மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை கேட்கச் சொல்லுங்கள். பதில் சொல்லுகிறோம்” என்றார்.

அப்போது கொளத்தூர் தொகுதி கன்னித்தீவு போல இருக்கிறது என ஜெயகுமார் விமர்சித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  

தனது இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசி வருகிறார். அவர் போகும் கன்னித்தீவு இது அல்ல என்றார்.

கலை.ரா

குளிர்சாதன பெட்டி வெடித்து மூவர் பலி!

குஜராத் தேர்தல் : மோடி – ராகுல் – கெஜ்ரிவால்…மக்கள் செல்வாக்கு யாருக்கு? அதிரடி சர்வே முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share