நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சயான், வாளையார் மனோஜ் , சந்தோஷ் சாமி, தீபு, சதீசன் ,உதயகுமார், ஜித்தின் ஜாய் , ஜாம்ஷீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கோத்தகிரி போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இது குறித்த விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
கொடநாடு வழக்குகள் தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன் உள்பட 300 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை தனிப்படை விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நவம்பர் 6 இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!