கொடநாடு வழக்கு : ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!

அரசியல்

கொடநாடு கொலை வழக்கு விசாரணை ஆவணங்கள் இன்று (அக்டோபர் 11) சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக சோலூா் மட்டம் போலீசார் வழக்குப் பதிவு விசாரணையைத் தொடங்கினர். மேற்கு மண்டல காவல் துறை ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயா டிவி மேலாண்மை இயக்குநர் விவேக் ஜெயராமன், கோவை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, கொடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 316 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் நேற்று உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சுமார் 1000 பக்கம் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 11) நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு வந்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுத் துறையினர் விசாரணை ஆவணங்களின் நகலைப் பெற்றுச் சென்றனர்.

கொடநாடு வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி புலனாய்வு பிரிவில் உள்ள 3 ஏடிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிகள், 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இதில் குன்னூர் டிஎஸ்பி சந்திர சேகர் இடம்பெற்றுள்ளார்.

இந்த சிபிசிஐடி புலனாய்வு பிரிவு கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, கொடநாடு எஸ்டேட் கம்பியூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு மற்றும் ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை விசாரிக்கவுள்ளது.

பிரியா

எம்.எல்.ஏக்கள் கோரிக்கை : ஆய்வு செய்ய குழு அமைப்பு!

பொருளாதார வல்லுநர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *