கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளது.
கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகத் தமிழகக் காவல்துறை விசாரித்து வந்த நிலையில், வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும் என்று நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன.
மே முதல் வாரத்தில் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி மற்றும் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர்.
கொடநாடு கொலை சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜுவின் ஜோதிடரிடம் விசாரிக்க இருப்பதாகவும், கனராஜுவின் மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் ஜோதிடரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இவ்வழக்கு தமிழகக் காவல்துறையிடம் இருந்த போது சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது சிபிசிஐடியும் விசாரணை நடத்தவுள்ளது.
பிரியா
சொதப்பிய மும்பை: குஜராத் அபார வெற்றி!
சீன அமைச்சர் வருகை: எல்லை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?