அதிமுக அலுவலகத்தில் பன்னீர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கிடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.
பொதுக்குழுவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வானகரம் நோக்கி உற்சாக வரவேற்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், பன்னீர் செல்வம் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். ஓபிஎஸ் வருகிறார் என்று தகவல் கிடைத்ததும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தைப் பூட்டியிருக்கின்றனர். பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதோடு தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது கட்டை, கம்பு கத்தியுடன் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். சாலைகளில் நின்றுகொண்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். கல்வீச்சு தாக்குதலும் நடத்தினர்.
மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்குக் கத்திக்குத்தும் ஏற்பட்டுள்ளது.
அதோடு போலீசார் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகளை அமைத்து தடுத்தும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாதுகாப்புக்காகச் சென்ற காவல்துறையினர், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தலையில் சேர் வைத்துக்கொண்டு மறைத்துக்கொள்ளும் காட்சியையும் பார்க்கமுடிகிறது.
ஓபிஎஸ் உள்ளே இருக்கும் நிலையில் வெளியே பதற்றம் நீடித்து வருகிறது.
-பிரியா