உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை தூய்மை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஜூன் 8 ஆம் தேதியான இன்று உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெருங்கடல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம், “உலக பெருங்கடல் தினம் மிகவும் முக்கியமான ஒரு தினம். நாம் அனைவரும் இங்கு கடற்கரையை சுத்தம் செய்வதற்கு மட்டும் வரவில்லை. கடற்கரையை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோர பகுதிகளையும் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை பரப்புவதற்காகத்தான் வந்துள்ளோம்.
கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உண்டு. உலகில் 70 சதவீதம் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. எனவே கடல் பகுதி பாதுகாப்பாக இருந்தால் நிலப்பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்” என்று பேசினார் கிரண் ரிஜிஜு.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உடன் இணைந்து ஏராளமானவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர்.
மோனிஷா
நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு: எதிர்க்கும் விவசாயிகள்!
தமிழகம் முழுவதும் வேலைக்காக காத்திருப்போர் 66,70,825: தீர்வு என்ன?