ki veeramani says kalaignar madurai library

“கலைஞர் நூலகம் அறிவின் கடலாக திகழ்கிறது” – கி.வீரமணி

அரசியல்

கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவின் கடலாக திகழ்கிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (ஆகஸ்ட் 18) பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மதுரைக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது, உலகிலேயே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்ட நூலமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திகழ்கிறது.

அறிவியல், பகுத்தறிவு, திராவிட இயக்க வரலாறு, தமிழ் மொழியின் சிறப்புகள் கொண்ட கலைஞரின் பெயரால் நூலகம் அமைந்துள்ளது சிறப்பாகும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இளம் தலைமுறையினர் தங்களது அறிவினை கூர்மைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அறிவின் கடலாக கலைஞர் நூலகம் திகழ்கிறது.

கலைஞர் நூலகத்தை பார்வையிட்ட இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இடிதாங்கியை வைத்து கட்டடங்களை பாதுகாப்பது போல அரசியல் இடிதாங்கிகளிடம் இருந்து கலைஞர் நூலகத்தை பாதுகாக்க மக்கள் முன் வருவார்கள்.

விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு குல கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக 13 ஆயிரம் கோடி ஒதுக்கி செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தான திட்டம். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மீண்டும் ஜாதி உணர்ச்சியை உருவாக்க முயற்சி நடக்கிறது. குலத் தொழிலை அறிமுகப்படுத்த முயற்சி நடக்கிறது. இதை எதிர்த்து ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதன் மூலம் ஜாதியை வர்ணாசிரமத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆகவே தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

நாங்குநேரி சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

நிலவிற்கு மிக அருகில் சென்றது சந்திரயான் 3

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *