|

“நட்பு” திருச்சி சிவாவுடன் குஷ்பூ செல்ஃபி!

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ இன்று (மார்ச் 30 ) சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ.

ரஜினி, கமல் என 80-களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

2020-ல் பாஜகவில் இணைந்த குஷ்பூ 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், பழைய நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.

அவர் இன்று (மார்ச் 30 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , ”பழைய நண்பர்களை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. திமுக எம்.பி.திருச்சி சிவா அவர்கள். உங்களைப் பார்ப்பது மிகவும் அற்புதம்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நகராட்சி துறை – சென்னைக்கு புதிய அறிவிப்புகள்!

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031.32 கோடி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts