விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது,
“எல்லோருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட நமது ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டு வருகிறோம்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி நமது இலக்கோ, அதேபோல தமிழ்நாட்டை இந்தியாவோட விளையாட்டு தலைநகரமாக நிலைநிறுத்துறதும் நம்ம குறிக்கோள்.
இந்த இலக்கை நோக்கி பயணிக்கிற விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டில் விளையாட்டு கட்டமைப்புகளை உயர்த்திக்கொண்டிருக்கிறோம். கேலோ இந்தியா தமிழ்நாட்டில் நடக்கிறது எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய மகிழ்ச்சி.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சேர்க்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா 2024 லோகோவில் வான்புகழ் வள்ளுவர் இடம்பெற்றுள்ளார். அந்த சிலை கலைஞரால் திருவள்ளுவருக்கு நாட்டின் தென் முனையில் வானுயர அமைக்கப்பட்டது.
ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக பேசிய வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் அந்த லோகோவில் இடம்பெற்றிருப்பது நமக்கு கூடுதல் பெருமை.
விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கருதி நாம் செயல்பட்டு வருகிறோம். அன்பு பாலங்களையும், சமூக நல்லிக்கணத்தையும் உருவாக்குகிற ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு.
விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷுடன் நடிக்க ஆசை: D51 குறித்து ராஷ்மிகா
25 சதவீதம் குடும்பத்தினர் பொங்கல் பரிசு வாங்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
“இந்தியாவுக்கே திராவிட மாடல் அரசு வழிகாட்டுகிறது” : பிரதமர் மோடி முன் உதயநிதி பேச்சு!