வெற்றி கொண்டாட்டம் முக்கியம் தான், ஆனால்… நிர்வாகிகளுக்கு கார்கே அட்வைஸ்!

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கொண்டாடும் அதேவேளையில், சில மாநிலங்களில் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “ராகுல் காந்தி பாரத் ஜோடா நடைபயணம் மேற்கொண்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதமும் அதிக தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதேபோல மேகாலயா, நாகாலாந்து, அஸ்ஸாம் மாநிலங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளோம். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.

இதுதவிர பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நம்முடைய வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இனிமேல் நகர்ப்புறங்களிலும் நாம் அதிக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

வெற்றியை கொண்டாடும் அதேவேளையில் சில மாநிலங்களில் நாம் சரியாக செயல்படாதது குறித்து ஆராய வேண்டும்.

சட்டமன்ற தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்ட சில மாநிலங்களில் நம்மால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

விரைவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாம் அவசரமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நாம் ஒழுக்கமாகவும் ஒருங்கிணைந்தும் செயல்பட வேண்டும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாரகள். அதை நாம் பலப்படுத்த வேண்டும். மக்களின் இந்த தீர்ப்பை உண்மையான பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் பங்களித்த கட்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்னுடைய கடமையில் இருந்து நான் தவறிவிடுவேன்” என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வரலெட்சுமி திருமணம்: ஸ்டாலினை நேரில் அழைத்த சரத்குமார்

சஞ்சு சாம்சனுடன் பிரச்சனையா? – போட்டுடைத்த ரிஷப் பண்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “வெற்றி கொண்டாட்டம் முக்கியம் தான், ஆனால்… நிர்வாகிகளுக்கு கார்கே அட்வைஸ்!

  1. வெற்றி கொண்டாட்டமா! பைத்தியமா இவுங்க..🤔🤔🤔🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *