இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் ஏன் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் புறக்கணிப்பா?
இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியாவில் இப்போது ஏன் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார்?
நான் முன்பே கூறியது போல், நமது சுதந்திரமான அமைப்புகளின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால், நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சியடைந்த அரசியலமைப்பு நிறுவனங்களில் இந்திய தேர்தல் ஆணையம் கடைசியாக இருக்கும்.
தேர்தல் ஆணையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களையும் திறம்பட வழங்கியுள்ள நிலையில், பிப்ரவரி 23-ஆம் தேதி பதவிக்காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்காதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு மோடி அரசு பதில் அளித்து நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹர்மன்ப்ரீத் ருத்ரதாண்டவம்: நாக்-அவுட்டுக்கு முன்னேறிய MI மகளிர் அணி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!