வங்கதேசத்தில் கலவரம் அதிகரித்துள்ள நிலையில், 400 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஒன்றரை மாதமாக நடந்து வந்த மாணவர் போராட்டங்களால், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை அவசர அவசரமாக ராஜினாமா செய்து, ஆகஸ்ட் 5-ஆம் தேதி விமானம் மூலம் இந்தியாவிற்கு தப்பி வந்தார். இதை தொடர்ந்து மாணவர் இயக்கம் நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரியும், முஹம்மத் யூனுஸை இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக நியமிக்கச் சொல்லி எச்சரிக்கை விடுத்திருந்தது. khaleda zia
அதை ஏற்ற அந்நாட்டின் ஜனாதிபதி முஹம்மத் ஷஹபுத்தின், நேற்று மதியம் நாடாளுமன்றத்தை கலைத்தார். நோபல் பரிசு பெற்ற டாக்டர் முஹம்மத் யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் , 2018-ஆம் ஆண்டு அதிகார துஷ்பிரயோகம் குற்றத்திற்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கபட்டு, பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த, வங்கதேசத்தின் முன்னால் பிரதமர் கலெதா சியா நேற்று விடுவிக்கப்பட்டார். khaleda zia
வங்கதேச தேசிய கட்சியின் துணைத் தலைவரான இவர், மூன்று முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் மூலம் வங்கதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து டெல்லிக்கு 400 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் வங்கதேசத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
செந்தில் பாலாஜி மீதான ED வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Olympics 2024: ஆடவர் ஹாக்கி… அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா… வெண்கலம் கிடைக்குமா?
ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!