கரூர் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கரூர் திமுக மாசெவான, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி வந்தார். ஆனால் ராகுல் காந்தியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் கரூர் தொகுதியை காங்கிரசுக்கே ஒதுக்க வைத்தார் சிட்டிங் எம்பி ஜோதிமணி.
இதன்பிறகு தான் செந்தில் பாலாஜி தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட கூடாது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேறு எவராவது போட்டியிடலாம் என்பதுதான் செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ்.
கரூர் காங்கிரஸில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களாக இருக்கும் நிர்வாகிகள் மூலமாக இந்த முயற்சி டெல்லி வரை கொண்டு செல்லப்பட்டது. பேங்க் சுப்பிரமணியம் போன்ற கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு மீண்டும் ஜோதி மணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்கள்.
ஆனால் ஜோதிமணிக்காக தமிழ்நாடு மகளிர் காங்கிரசார் டெல்லியில் முகாமிட்டு போராட்ட குணம் வாய்ந்த பெண்ணான ஜோதி மணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
’கரூரை காங்கிரஸுக்கு கொடுத்ததே ஜோதிமணிக்காகத்தான். ஒருவேளை கரூரை ஜோதிமணிக்கு கொடுக்காமல் காங்கிரசில் வேறு யாருக்கேனும் கொடுத்தால், சுயேச்சையாக களமிறங்க கூட தயங்க மாட்டார் ஜோதிமணி. அப்படிப்பட்ட போராட்டவாதி அவர். அவ்வளவு தூரமெல்லாம் பிரச்சினை போகாது. செந்தில் பாலாஜியின் கடைசிநேர செக்கையும் தாண்டி ஜோதிமணி கரூர் தொகுதியை பெற்று விடுவார்’என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
–வேந்தன்
விருதுநகர்: யார் இந்த சிந்துஜா? கடைசி வரை போராடிய மாணிக்கம் தாகூர்
சிவகங்கை: சிதம்பரத்தை சீண்டிய திருநாவுக்கரசர்
நீ பய படாத அக்கா, அண்ண உள்ளதா இருப்பாரு 2025 வரைக்கும்