kerala governor arif mohammed khan accused pinarayi vijayan

கேரள ஆளுநர் மீது தாக்குதல்?: எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் 7 பேர் கைது!

அரசியல் இந்தியா

kerala governor arif mohammed khan accused pinarayi vijayan

இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆர்வலர்களை பயன்படுத்தி தன்னை தாக்குவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்ததாக கேரள கவர்னர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு போன்றே அண்டைமாநிலமான கேரளாவிலும் முதல்வர் – ஆளுநர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

பல்கலைக்கழக செனட்டுகளை நியமனம் செய்வது தொடர்பாக ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக ஆளும் சிபிஐ(எம்) -ன் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) சார்பில் கடந்த சில நாட்களாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 11) இரவு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லி புறப்படுவதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது,  எஸ்.எஃப்.ஐ. செயல்பாட்டாளர்கள் மூன்று இடங்களில் கறுப்பு கொடி காட்டி காரை முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில், கேரள அரசியலில் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆரிப் முகமது கானை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று எஸ்.எஃப்.ஐ இன்று அறிவித்துள்ளது.

நிதிநிலை அறிக்கை கேட்டதற்காக தாக்குதல்!

தனது வாகனம் முற்றுகையிடப்பட்ட நிலையில் இதுகுறித்து டெல்லியில் உள்ள கேரள பவனில் செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசினார்.

அவர், “மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆளுநரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசாங்கம் கட்டாயமில்லை என்று முதல்வர் கூறுகிறார்.

அவர் பதில் சொல்லாமல் இருக்கட்டும். 10 நாட்கள் காத்திருக்கிறேன். பின்னர், மாநிலம் நெருக்கடியில் இருந்தால், மத்திய அரசுக்கு எனது பரிந்துரைகளை வழங்குவது எனது கடமை.

கேரள அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை வழங்க முடியாத நிலையில் உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைச் செயலாளரின் பிரமாணப் பத்திரத்தைத் தொடர்ந்து கேரளாவின் நிதிநிலை குறித்து அறிக்கை கேட்டதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

என்னை உடல்ரீதியாக தாக்க இந்த சதித்திட்டம் தீட்டியவர் முதல்வர் பினராயி விஜயன் தான். மூன்று நாட்களுக்கு முன்பு, நான் மாணவர்களை தூண்டி விடுவதாக ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார்.

என்னை தாக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல… இது 5வது முறை. முன்பு கண்ணூரிலும் அவர்கள் என்னை உடல்ரீதியாக தாக்க முயன்றனர்” என ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டியுள்ளார்.

Kerala Governor Accuses CM Pinarayi Vijayan Of Conspiring To Physically Harm Him

7 பேர் கைது!

ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக ஆளுநர் குற்றஞ்சாட்டிய நிலையில் பினராயி அரசை எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனையடுத்து ஆளுநருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 7 எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீது IPC பிரிவுகள் 143, 149 (சட்டவிரோதமாக கூடியிருந்தமைக்கான தண்டனை), 147 (கலவரத்திற்கான தண்டனை), 283 (பொது வழியில் ஆபத்து அல்லது தடை செய்தல்), 353 (தாக்குதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

8 ரூபாய்க்கு 2.5GB டேட்டா…. ஜியோவின் அசத்தல் திட்டம்!

“குறி வச்சா இரை விழணும்” ரஜினியின் தலைவர் 170 டைட்டில் இதோ!

kerala governor arif mohammed khan accused pinarayi vijayan

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *