இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 27) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து, கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேம்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மே 10ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடலாம் என்றும், ஜூன் 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு சரணடைய வேண்டும் என்றும் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மே 27) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், PET-CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதால் ஜாமீனை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி : 35 பாலஸ்தீனியர்கள் பலி!